NMMS Science Question in Tamil:
31. துல்லியத்தன்மை அடிப்படையில் சிறந்த கடிகார வகை எது?
1. குவார்ட்ஸ் கடிகாரம்
2. அணு கடிகாரம்
3. 1 மற்றும் 2
4. எண்ணிலக்க கடிகாரம்
ANSWER KEY: 3
32. கூற்று: தற்போது விண்வெளித்துறையில் அணு கடிகாரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
காரணம்: அணு கடிகாரங்கள் அதி துல்லியத்தன்மை வாய்ந்தவை.
1. கூற்று சரி. காரணம் கூற்றை தெளிவாக விளக்குகிறது.
2 .கூற்று தவறு. காரணம் சரி
3. கூற்று சரி. காரணம் தவறு
4. கூற்று மற்றும் காரணம் தவறு.
ANSWER KEY: 1
33. பின்வருவனவற்றுள் காட்சியின் அடிப்படையில் அமைந்த கடிகார வகை எது?
1. குவார்ட்ஸ் கடிகாரம்
2. ஒப்புமை கடிகாரம்
3.1 மற்றும் 2
4. அணு கடிகாரம்
ANSWER KEY: 2
34. பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
1. அணு கடிகாரம் – அணு நிறை
2. குவார்ட்ஸ் கடிகாரம் – மின்னணு அலைவுகள்
3. அணு கடிகாரம் – 1/1013 வினாடி
4. குவார்ட்ஸ் கடிகாரம் – 1/109 வினாடி
ANSWER KEY: 1
35. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
1. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு அருகில் உள்ள கிரீன்விச் என்னுமிடத்தில் இராயல் வானியல் ஆய்வுமையம் (Royal Astronomical Observatory) அமைந்துள்ளது.
2. புவியானது, 15° இடைவெளியில் அமைந்த தீர்க்கக்கோடுகளின் அடிப்டையில் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேர மண்டலங்கள் (Time Zones) என்று அழைக்கப்படுகின்றன.
3. இரு அடுத்ததடுத்த நேரமண்டலங்களுக்கு இடையே உள்ள காலஇடைவெளி 1 மணி நேரம் ஆகும்.
4. அனைத்தும்
ANSWER KEY: 4
36. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
1. இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) என்ற இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக்கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது.
2. இக்கோடானது 82.5° கிழக்கில் செல்லும் தீர்க்கக்கோட்டில் அமைந்துள்ளது.
3. இந்திய திட்டநேரம் = கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி
4. அனைத்தும்
ANSWER KEY: 4
37. பொருத்துக.
a) மிர்சாபூர் – i) GMT + 5.30
b) IST – ii) 15°
c) கிரீன்விச் – iii) 82.5°
d) 24 நேர மண்டலங்கள் – iv) 0°
1. a – ii b – i c – iv d – iii
2. a – iii b – i c – iv d – ii
3. a – iv b – i c – ii d – iii
4. a – i b – iii c – iv d – ii
ANSWER KEY: 2
38. பொருத்துக.
a) ஓர் ஆண்டு i) 9.46 × 10 15 மீட்டர்
b) ஓர் ஒளி ஆண்டு ii) 4.22 ஒளி ஆண்டு
c) ப்ராக்ஷிமா செண்டாரி iii) 25000 ஒளி ஆண்டு
d) அண்ட மையத்திலிருந்து புவியின் தொலைவு iv) 3.153 × 107 வினாடி
1. a – ii b – i c – iv d – iii
2. a – iii b – i c – iv d – ii
3. a – iv b – i c – ii d – iii
4. a – i b – iii c – iv d – ii
ANSWER KEY: 3
39. ஒரு அளவீட்டை சிறப்பாக மேற்கொள்ள ______ அவசியமாகிறது.
1. கருவி
2. திட்ட அளவு
3. ஏற்றுக்கொள்ளப்பட்ட அலகு
4. அனைத்தும்
ANSWER KEY: 4
40. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
1. கண்டறியப்பட்ட மதிப்பு உண்மையான மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை துல்லியத்தன்மை குறிக்கிறது.
2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகள் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை நுட்பம் குறிக்கிறது.
3. தோராய மதிப்பு என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமாக உள்ள மதிப்பாகும்.
4. அனைத்தும் சரி.
ANSWER KEY: 4
41. ஓர் எண்ணை முழுமையாக்குதலுக்கான விதிகளை வரிசைப்படுத்துக.
அ. வலப்புற இலக்கமானது 5 அல்லது 5 ஐ விட அதிகமாக இருப்பின் அடிக்கோடிட்ட இலக்கத்துடன் 1 ஐக் கூட்ட வேண்டும்
ஆ. முழுமையாக்கப்பட வேண்டிய இலக்கத்தினை முதலில் அடிக்கோடிட வேண்டும். பின்பு அதற்கு வலதுபுறம் உள்ள இலக்கத்தினைப் பார்க்க வேண்டும்
இ. முழுதாக்கிய பிறகு, அடிக்கோடிட்ட இலக்கத்திற்கு அடுத்துள்ள இலக்கங்களை விட்டுவிட வேண்டும்.
ஈ. அந்த இலக்கமானது 5 ஐ விடக் குறைவாக இருப்பின், அடிக்கோடிட்ட இலக்கம் மாறாது
1. அ, ஆ, இ, ஈ
2. அ, இ, ஈ, ஆ
3. ஈ, ஆ, இ, அ
4. ஆ, ஈ, அ, இ
ANSWER KEY: 4
42. எண்களை முழுமையாக்கலின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
1. 1.864 – 1.86
2. 1.868 – 1.87
3. 1.864 – 1.87
4. 1.865 – 1.87
ANSWER KEY: 3
43. பின்வருவனவற்றுள் சிறந்த துல்லியத்தன்மை, நுட்பம் ஆகியவற்றைக் குறிக்கும் படம் எது?
ANSWER KEY: 3
44. பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
1. நிறை என்பது பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும்.
2. எடை என்பது நிறையின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை ஆகும்.
3. இடத்தைப் பொறுத்து நிறை மாறாது, எடை மாறும்.
4. அனைத்தும்
ANSWER KEY: 4
45. திரவங்களின் பருமனை அளக்கும் கருவி எது?
1. அளவிடும் குடுவை
2. பியூரெட்
3. பிப்பெட்
4. அனைத்தும்
ANSWER KEY: 4
46. 1 லிட்டர் = ________.
1. 100 CC
2. 1000 CC
3. 10000 CC
4. 100000 CC
ANSWER KEY: 2
47. பொருத்துக.
a) பரப்பளவு – i) பொருளின் மேற்பரப்பு – அ) m3
b) கனஅளவு – ii) நிறை / பருமன் – ஆ) kg / m3
c) அடர்த்தி – iii) பருமன் – இ) m2
1. a – iii – இ b – ii – இ c – i – ஆ
2. a – ii – ஆ b – i – இ c – iii – அ
3. a – i – இ b – iii – அ c – ii – ஆ
4. a – i – அ b – iii – இ c – ii – ஆ
ANSWER KEY: 3
48. பொருத்துக.
(i) சதுரம் – a. lb
(ii) செவ்வகம் – b. 1/2bh
(iii) முக்கோணம் – c. வரைபடத்தாள்
(iv) வட்டம் – d. a²
(v) ஒழுங்கற்ற வடிவம் – e. r²
1. (i) – c (ii) – d (iii) – a (iv) – e (v) – b
2. (i) – d (ii) – a (iii) – b (iv) – e (v) – c
3. (i) – d (ii) – e (iii) – a (iv) – c (v) – b
4. (i) – c (ii) – a (iii) – b (iv) – e (v) – d
ANSWER KEY: 2
49. பொருத்துக.
a) கனசதுரம் – i) நீளம் x நீளம் × நீளம்
b) கனசெவ்வகம் – ii) நீளம் x அகலம் x உயரம்
c) கோளம் – iii) r²h
d) உருளை – iv) 4/3 r³
1. a – ii b – i c – iv d – iii
2. a – iii b – i c – iv d – ii
3. a – i b – ii c – iv d – iii
4. a – i b – iii c – iv d – ii
ANSWER KEY: 3
50. 12 மீ நீளமும், 4 மீ அகலமும் உடைய செவ்வகத்தின் பரப்பு _______.
1. 48 மீ
2. 3 மீ
3. 48 மீ2
4. 3 மீ2
ANSWER KEY: 3
51. 7 மீ ஆரமுடைய வட்டத்தின் பரப்பு _______.
1. 154 மீ2
2. 54 மீ2
3. 154 மீ
4. 54 மீ
ANSWER KEY: 1
52. அடிப்பக்கம் 6 மீ, உயரம் 8 மீ உடைய முக்கோணத்தின் பரப்பு _______.
1. 24 மீ
2. 48 மீ
3. 24 மீ2
4. 48 மீ2
ANSWER KEY: 3
53. ஒழுங்கற்ற வடிவமுடைய பொருளின் பரப்பளவை ______________ ஐ பயன்படுத்தி கண்டறியலாம்.
1. அளவுகோல்
2. அளவு நாடா
3. காகிதம்
4. வரைபடத்தாள்
ANSWER KEY: 4
54. அளவீட்டு முகவை, நிரம்பி வழியும் முகவை போன்றவற்றைப் பயன்படுத்தி மட்டுமே _______________ பொருளின் கனஅளவைக் கண்டறியலாம்.
1. ஒழுங்கான வடிவமுடைய
2. ஒழுங்கற்ற வடிவமுடைய
3. ஒழுங்கான, ஒழுங்கற்ற வடிவமுடைய
4. அதிக அடர்த்தி கொண்ட
ANSWER KEY: 2
55. அளவீட்டு முகவை, நிரம்பி வழியும் முகவை போன்றவற்றைப் பயன்படுத்தி ____ பொருளின் கனஅளவைக் கண்டறியலாம்.
1. ஒழுங்கான வடிவமுடைய
2. ஒழுங்கற்ற வடிவமுடைய
3. ஒழுங்கான, ஒழுங்கற்ற வடிவமுடைய
4. அதிக அடர்த்தி கொண்ட
ANSWER KEY: 3
56. அடர்த்தி = ______.
1. நிறை / கனஅளவு
2. நிறை x கனஅளவு
3. கனஅளவு + நிறை
4. கனஅளவு – நிறை
ANSWER KEY: 1
57. அடர்த்தியின் SI அலகு _______.
1. கி.கி.மீ-3
2. கி.கி.மீ3
3. கி.கி. / மீ3
4. 1 மற்றும் 3
ANSWER KEY: 4
58. பின்வருவனவற்றுள் தவறானது எது?
1. நிறை = அடர்த்தி × கனஅளவு
2. நிறை = அடர்த்தி / கனஅளவு
3. கனஅளவு = நிறை / அடர்த்தி
4. அடர்த்தி = நிறை / கனஅளவு
ANSWER KEY: 2
59. படத்தை உற்றுநோக்கி கல்லின் கனஅளவைக் கூறுக.
1. 10 மி.லி.
2. 30 மி.லி.
3. 40 மி.லி.
4. 50 மி.லி.
ANSWER KEY: 1
60. படத்திலிருந்து நாம் அறிவது என்ன?
1. தக்கை நீரை விட குறைவான அடர்த்தியைப் பெற்றிருப்பதால் நீரில் மிதக்கிறது.
2. இரும்பு நீரை விட அதிகமான அடர்த்தியைப் பெற்றிருப்பதால் நீரில் மூழ்குகிறது.
3. இரும்பை விட தக்கை குறைவான அடர்த்தியைப் பெற்றுள்ளது.
4. அனைத்தும் சரியான கூற்றுகள்.
ANSWER KEY: 4